Saturday, February 14, 2009

ஊனம் ஒரு நல் அழகே!

படைப்புகளில் இவர்கள் வித்தியாசம்
என்பதால், ஊனத்திலும் இவர்கள்
சாதனையாளர்கள் என்பதால்
ஊனமும் ஒரு நல் அழகே.

பலவீனம் உடல் உறுப்புகளில்
ஆனால் பலமோ மனதில்
சிந்தை பலத்தால் ஜெயித்துக் காடுவதால்
ஊனம் ஒரு நல் அழகே!

கண் இல்லாமல் பார்க்கிறார்கள்
செவிப்பலம் இன்றிக் கேட்கிறார்கள்
பாஷை இல்லாமல் பேசுகிறார்கள்
பலம் இல்லாம்லேயே வாழ்கிறார்கள்.

கரங்கள் இன்றி படைக்கிறார்கள்
சிறகு இன்றி சிந்தையால் பறக்கிறார்கள்
கால்கள் இல்லாமல் நடக்கிறார்கள்
வாழ்வு இழந்தும் வாழ்கிறார்கள்

அசாதாரண வாழ்வு வாழ்வதால்
பிறர் சந்தோஷத்தில் தம் சந்தோஷத்தை
காண்பதால், குறையை நிறைவாய்
கொள்வதால் இவர்களும் அழகே.

இறை அருள் இருக்கும்வரை
நல்ல பெற்றோர் இருக்கும்வரை
அருமையான உறவுகள் இருக்கும்வரை
இனிய உடன்பிறப்புகள் இருக்கும்வரை

வழிநடத்தும் ஆசான்கள் உள்ளவரை
உயிர்தரும் நண்பர்கள் உள்ளவரை
வழிகாட்டும் வள்ளல்கள் உள்ளவரை
ஊனத்தை மதிக்கும் உள்ளங்கள் உள்ளவரை

ஊனம் ஒரு நல் அழகே!
உரிய உரிமைகளை தந்து
சமூகம் இவர்களை அங்கீகரித்தால்
ஊனமும் ஒரு நல் அழகே!

உற்றுப்பார்த்தால் ஒளிந்திருக்கும்
திறமைகள் திரியும் உயர்வு தந்து
பார்த்தால் ஊனத்தின் உன்னதம் புரியும்
ஊனமும் ஒரு நல் அழகே புரியும்.

-கவிதாயினி। சாந்தி ராபர்ட்ஸ்
உதகை.

2 comments:

  1. இக்கருத்தை ஏற்கும் இதயமும் நல் அழகே!

    -தவப்புதல்வன்.

    ReplyDelete
  2. தோழி கவிதாயினி அவர்களின் கவிதைகள் அழகே தோழியின் ஒவொரு வரியும் தன்னம்பிக்கை ஊட்டுவதாக உள்ளது. தோழியின் கவிசேவைக்கு நன்றிகள். எங்களது வலைப்பூவான www.handicappedwelfare.blogspot.com வாசித்து உங்கள் கவை சேவையை தொடர அன்பான வேண்டுகோளுடன் தோழர் திருச்சி R.பாக்கியராஜ்.

    ReplyDelete