வாழப்பழகுவோம்..
எத்தனை எத்தனை
வண்ணப்பூக்கள்
பூக்கின்றன.
பூக்களின் செழுமை
காத்து நிற்பதுவன்றோ
காற்றின் குணம்.
தென்றலாய் வருடினாலும்
புயலாய் மிரட்டினாலும்
காற்றின் முனைப்பை
ஈடுசெய்து
மணம் தந்து மகிழச்செய்வது
பூக்களின் குணம்
காற்றினைப்போல
எளியோரைக் காத்து,
பூக்களைப்போல
மணம்தந்து,
மனிதர்கள் நாம்
வாழப்பழகுவோம்!
கவிஞர் பி. மாரியம்மாள்
நெல்லை
No comments:
Post a Comment