அடையாளம் காட்டுவோம்...!
விண்மீன்கள்
தொலைவில் இருந்தாலும்,
சுடர்விட்டு ஜொலிக்கின்றது
புள்ளிமான்கள்
காட்டில் இருந்தாலும்
சுதந்திரமாய் வாழ்கின்றது.
சிற்றீசல்
வாழ்க்கை சில நொடிகளெனினும்
சிறகடித்துப் பறக்கின்றது.
ஆலமரம்
வேரினை இழந்தாலும்
விழுதுகளால் வாழ்கின்றது.
விண்மீன் போல
ஒளி கொடு!
புள்ளீமான் போல
துள்ளீக்குதி!
சிற்றீசல் போல
சிறகடி!
ஆலமரம் போல
தழைத்து வாழ்ந்திடு!
மாற்றுத்திறன் கொண்ட
அன்பு நெஞ்சங்களே,
நமது திறமையை
உலகினர் மத்தியில்
அடையாளப்படுத்த
உத்வேகம் கொண்டே எழுவோமே...!
கவிஞர் சூ. ஆரோக்கியமேரி
சேலம்
No comments:
Post a Comment