எனக்கும் ஆசை
அமாவாசை நிலவுக்கு
வெள்ளையடிக்க ஆசை...
காகித கப்பலில்
உலகம் சுற்றிவர ஆசை...
உயிரோடு சென்று
சொர்க்கம் பார்த்துவர ஆசை...
காதலர்களின் உயிரை மட்டும்
கவரக்கூடாதென்ற உடன்படிக்கையில்
எமனுடன் கையெழுத்திட ஆசை...
பனித்துளியை பாலைவனத்தில்
பயிர் செய்ய ஆசை...
தனி அறையில்
தாசியுடன் விடிய விடிய
இராமாயணம் பேச ஆசை...
முடிவில்
மனித வாழ்வில்
சோகத்தை மட்டும்
பிரித்தெடுக்க ஆசை...
கவிஞர் இளங்கோ வரதராஜன
பெரம்பலூர்
No comments:
Post a Comment