Saturday, January 23, 2010

கெட்டுப் போச்சி நாடு

அர்த்தமற்ற இறப்புக்கள்
அன்றாடம் நிகழும்
சுத்தமற்ற நெஞ்சங்களே
ஏராளம் உலவும்!

வன்முறைகள் ஓங்கியெங்கும்
அலறல்களின் முழக்கம்
'வாழ்க' என்ற கோஷமிட்டு
வாழ்வது சிலரின் வழக்கம்!

சாக்கடையின் புழுக்கள் போல‌
நெளிய பழகிக் கொண்டோம்
சாராயத்தை உலகமாக்கி
பழைய யுகத்தை வென்றோம்!

வாகனங்கள் நிறைய உண்டு
சாலைகள் சரியில்லை
வாழவரும் பெண்களுக்கோ
வரதட்சணை தொல்லை!

மேடையெங்கும் தலைவர்களின்
வெட்டிப்பேச்சு அரசியல்...
கெட்டுப்போச்சு நம்ம நாடு
வெடிகுண்டு அமளியில்!

ஜனநாயகக் கடப்பாறை
ஏற்படுத்துது காயம்
இருந்தாலும் பூசிக் கொண்டோம்
சுதந்திரத்தின் சாயம்..!

கவிஞர் கா. இளையராஜா
கடலூர்

No comments:

Post a Comment