Saturday, January 23, 2010

நம்பிக்கையின் விருட்சம்

உனக்குள் தூங்குதடா
ஒரு வெளிச்சம்
துளிர துடிக்குதடா
ஒரு விருட்சம்
கல்லை கொஞ்சம் செதுக்கிப்பார்
சிற்பம் வரும் தன்னாலே
உழைப்பை கொஞ்சம் உரசிப்பார்
வெற்றி வரும் பின்னாலே!

துணிவென்பது தூண்களை போல‌
தூங்காமல் துணிந்து விடு
பணிவென்பது கண்களை போல‌
உயர்வாக மதித்து விடு!

கனவென்பது வார்த்தை இல்லை
மெய்யாக்க முயற்சி எடு
வாழ்க்கையென்பது ஒரு முறை தானே
போராடி வென்று விடு!

மூடி வைத்த வானம் இல்லை
மூழ்கி எடுக்கா முத்தும் இல்லை
மலர்கள் வந்து வாழ்த்துச் சொல்லும்
நேரம் வெகு தூரமில்லை!

கவிஞர் க.மாரிமுத்து
இராஜபாளையம்

No comments:

Post a Comment