கதை
அவனைப் பற்றி
இவனிடம் ஒரு கதை.
இவனைப் பற்றி
அவனிடமும் ஒரு கதை.
மற்றவர்களைப் பற்றிய
கதைகளைச் சொல்வதில்
இணையில்லாத விருப்பம்
எல்லோருக்கும் எப்பொழுதும்.
தன்னைப்பற்றிய கதைகள்
மறுஒலிபரப்பாகிக் கிடப்பதை
கேட்கமுடியாத செவிகளுடையோர்
தொடர்கின்றனர்
நீள் கதைகளை.
என்றாலும்
சொல்லப்படாமலே இருக்கின்றன
இன்றைய கதைகளுக்கான
உண்மையான முன்கதைகள்.
கவிஞர் தமிழியலன்
சென்னை
No comments:
Post a Comment