Saturday, January 23, 2010

தடைகளை தாண்டிடு!

இருப்பைத் தெரிவிக்கக்கூட‌
தயங்கும் குடும்பம்...
வீதிக்கு வரவே
போராட வேண்டிய அவலம்...

சபிக்கப்பட்ட‌
வர்க்க அடையாளம்...
அங்கீகரிக்க
மறுக்கும் சமுதாயம்...
கருணை வழங்கி
உரிமை மறுக்கும்...

உனக்கான‌
தடைகளை தாண்டித்தான்
சாதிக்க வேண்டும்...

உன்னை நிரூபி
உலகை
உன்பக்கம் திருப்பு...

கவிஞர் சு.வெங்கட்ராமன்
சேலம்

No comments:

Post a Comment