Saturday, January 23, 2010

வசந்தம் வரும் வாசலைத் தேடி

தோல்வியை கண்டு பயந்து
உன்னை பூட்டிக் கொள்ளாதே
தோல்வியினை தூண்டுகோள் ஆக்கு
உன்னைச் சுற்றி
வெற்றி தேவதை
வெளிச்சவிதை விதைக்கட்டும்.

தூங்கி விழுந்தால்
இந்த பூமி உனக்கு படுக்கை
பாதங்கள் தயாரானால்
பாதைகள் மறுக்கப் போவதில்லை.

நீ விழித்தெழும் திசை
இந்த பூமிக்கு கிழக்கு!
உன் விரல்களில் அடங்கும்
சூரிய விளக்கு!
நட, எழுந்து நட!

நாளையென்ன‌
நிச்சயம்
வசந்தம் வரும்
இன்றே..

கவிஞர் கி.இராதாபாய்
புதுக்கோட்டை

No comments:

Post a Comment