ஊனத்தை நிமிர்த்தும் ஞானம்
பாலை என்பது இயற்கையிலுண்டு
கடும் பாறை என்பதும் இயற்கையிலுண்டு
குடிக்க உதவா உப்புநீர் கடலுமுண்டு
தின்ன உதவா கருவேலங் காயுமுண்டு
கள்ளியிலும் கூட பூவுமுண்டு
இவையெல்லாம் பயனற்ற பொருட்கள்.
இந்த வரிசையில்
ஊனமுற்றோர் வைத்து எண்ணப்பட்டனர்
அறிவியல் வளர்ச்சியில்
அனைத்தும் மறைகிறது;
அனனைத்தும் மாறுகிறது
மக்கள் துன்பமோ ஆறுகிறது
எல்லாம் அறிவியல் மாற்றங்கள்
என்றாலும் துயரங்கள் தீரவில்லை
காரணம்,
கருவிகள் இருப்போர் கையில்
கருணை நலமில்லை
அவர்கள் எலும்புகளெல்லாம்
மரத்தின் கட்டைகளாகிவிட்டன
மூளை முழுவதும் அறிவிருன்தும்
ஒரு மூலையிலும் கருணையில்லை
மனிதன் செய்யும் தவறுக்கெல்லாம்
மனிதன் பொறுப்பேற்கும் காலம் வேண்டும்
தொழில்நுட்பம் உண்டு
ஊனமுற்றோர் வாழ்வை மேம்படுத்தும்
துணைமைத் தொழில்நுட்பம் உண்டு
துணிந்து வாழ்ந்திட
கணினிக்கருவிகள் உண்டு
கண்ணும், காலும், கையுமின்றி
இருப்பவரெல்லாம்
செயற்கை உறுப்புகள் பெற்று
செயற்கை பார்வையைப் பெற்று
புயலெனப் புறப்ப்ட்டு
புவிதுயர் போக்கப்போகின்றனர்
ஊனத்தை நிமிர்த்தும்
தெளிந்த ஞானம் பெற்று
உலகம் காக்கப் புறப்படுகின்றனர்
கவிஞர் அர.செயச்சந்திரன்
திருச்சி
No comments:
Post a Comment