Saturday, January 23, 2010

தவம் முயல்வாய் என் கண்ணே

தவம் முயல்வாய் என் கண்ணே
அகத்துரும்பை அசைத்தெடுக்க‌
தவம் முயல்வாய்

தவம் என்பது
உள்நோக்கி ஒருமுகப்படும் தீட்சண்ய பார்வை
தியாகம்; பொறுமை; சாதனை; நம்பிக்கை

தவக்கொழுந்தே,
உன் கல்வியை, உன் பணியை,
உன் மேலாண்மையை
தவமாகக் கொள்

உருக்கண்டு எள்ளுவோரை புறந்தள்ளு
இங்கிதம் தெரியாமல் எவர் பேசிடினும்
இறைவனிடம் தள்ளு
மூர்த்தி சிறிதெனினும் கீர்த்தி பெரிதென காட்டு
ஈரடியால் பொருள்கூறும்
திருக்குறளாய் வழ்ந்துகாட்டு
அகத்தியர்போல் இனிய தமிழமுதம் கூட்டு
வாமனனாய் விசுவரூபம் காட்டு

தொலைவில் இல்லை
வற்றிச் சங்கொலி நீ எழுப்பும்நாள்

கவிஞர். கா. சங்கீதா
விருதுநகர்

No comments:

Post a Comment