நாங்கள் வெல்வோம்
பார்வை இழந்தவர்கள் பார்க்கிறார்கள்
கால்கள் இல்லாதவர்கள் நடக்கிறார்கள்
பேசமுடியாதவர்கள் பேசுகிறார்கள்
கேட்கமுடியாதவர்கள் கேட்கிறார்கள்
எந்த ஏசுபிரானும்
இந்த அற்புதத்தை நிகழ்த்தவில்லை
எங்கள் சகோதர சகோதரிகளின்
தன்னம்பிக்கையால்தான்
எல்லாம் சாத்தியமாயின.
ஒவ்வொரு மனிதனையும்
உரசிப்பார்த்தால்
ஒளிந்திருக்கும்
ஆயிரம் ஆயிரம் ஊனங்கள்
எங்களையும்
அப்படி சிறுமைப்படுத்தாதீர்கள்
நாங்கள் நம்பிக்கையானவர்கள்
ஏனெனில்,
ஊனமாகி போன
இந்த தேசத்திலும்
உயிர்ப்போடு இருப்பது
ஊனமுற்றவர்களின் உணர்வுதான்
கவிஞர் ப.லெனின்
திருச்சி
No comments:
Post a Comment