Saturday, January 23, 2010

மானவிலை

சாதியெனும் பேய்களின்னும்
சாகவில்லையே! அது
சதிகளென்னும் நாட்டைவிட்டுப்
போகவில்லையே!

ஆதிமனிதன் வாழ்க்கியிலும்
பேதமில்லையே! இங்கு
அர்த்தம் கெட்ட வாழ்க்கையினால்
லாபமில்லையே!

வீதியெனும் புழுதியிலே
விழுந்த நாய்களாய் சிலர்
வீசி எறிந்த எச்சிலையாய் பதவி கேட்கிறார்!

பாதிவெந்த அரிசிபோல‌
பானை விழுந்தவர் இங்கு
பாதிவிலை கொடுத்துகூட
பட்டம் வாங்குறார்!

நாதியற்ற‌ தாசிபோல‌
நடந்து கொள்பவர்;
நரித்தனமாய் தமிழைவிற்று
காசு பார்க்கிறார்!

நீதியெனும் சாட்டை கொண்டு
நித்தம் அடிப்பதா? இந்த‌
நியதி கெட்ட நாயை தின்று
ரத்தம் குடிப்பதா?

ஆதிமனிதன் வாழ்க்கையிலும்
பேதமில்லையே இன்னும்
அசிங்கத்தை புசிப்பவர்க்கு
ஞானம் வல்லையே!

கவிஞர் வெ. தமிழழகன்
சேலம்

No comments:

Post a Comment