நொண்டி
நான்
நல்ல மாணவன்
சான்றளித்தது
ஆசிரியர் இனம்
நல்ல நண்பன்
புகழ்ந்தது
நட்பு வட்டம்
நல்ல சகோதரன்
பறை சாற்றியது
பெண்ணினம்.
பெருமைக்குரியவன்
பெருமைப்பட்டது
என் உறவுகள்
திறமையானவன்
பதக்கம் தந்தது
வேலை தந்த நிர்வாகம்
நல்ல பொதுநல சேவகன்
உரிமையுடன் கொண்டாடினர்
கிராம மக்கள்
மொத்தத்தில் மிக நல்லவன்
இது என் காதலியின்
பாராட்டுரை
இத்தனை இருந்தும்
நொண்டி என்றே அழைக்கிறது
மானிட இனம்
கவிஞர் சின்னப்பா கணேசன்
சென்னை
No comments:
Post a Comment