நில் கவனி செல்
நகரின் பிரதான சாலை
வழிப்போக்கர்கள் நடந்து செல்ல
இருபுறமும் வழியிருந்தும்
நடந்து செல்ல மனமில்லை!
ஏனென்றால் வாகனத்தில் சென்றாலே...
ஏளனமாய் பார்க்கும்
நகரின் முக்கியசாலை...
அந்நிய தேசத்தின்
அழகுரதங்கள் மத்தியில்
தடுமாறும் பாதசாரிகள் போலவே,
சொந்த தேசத்தின் வாகனங்களும்
தட்டுத்தடுமாறி
நின்று... கவனித்து... சென்றன...
கவிஞர் வேம்பை. தி. பாலாஜி
சேலம்
No comments:
Post a Comment