Saturday, January 23, 2010

பூவே... நீ...

ஒரு நாள் வாழ்வுக்காக‌
ஒற்றைக் காலில் தவமிருக்கிறாய்
கட்டில் முதல் கல்லரை வரை
கால் பதிக்காத துறையில்லை

ஆண்டவன் தோள் ஏறி
ஆனந்த தாண்டவமும் ஆடுவாய்
கன்னியரின் கூந்தல் ஏறி
காளையரின் மனமும் கரைப்பாய்

காளையர் உனை ஏந்தி
பூவையருக்கு கோரிக்கை விடுப்பர்
வெற்றி பெற்றால் நீ தலையில்
தோல்வி பெற்றால் நீ தரையில்

நீ! புன்னகையில் சின்னம்
நேசத்தின் அடையாள,
மலர்ச்சியின் பிரதிபலிப்பு
மரணப்பாதையின் துணையிருப்பு
என அவதாரங்கள் பல எடுக்கிறாய்

எனினும்
உன்னுடைய பதவியும்
ஒரு நாள் பறிபோகும்
விதவையின் கூந்தலில்...

கவிஞர் மு. குமார்
தேனி

No comments:

Post a Comment