Saturday, January 23, 2010

கல்விக்கண் காமராஜர்

இன்று விலைபோகும் கல்வியை
அன்றே இலைபோட்டு பரிமாறியவர்
ஜாதிமத வேறுபாடின்றி
வீதிதோறும் கல்வியை விதைத்தவர்!

கனவுகளோடு பள்ளி வந்த‌
சின்னஞ் சிறார்க்கும்
உணவளித்த மூத்தவர்!
விளையாட்டுப் பிள்ளைகளையும்
நல்ல சிலையாக வடிக்கும்
கல்வியெனும் கலையறிந்த கலைஞர்!

ஆடுமேய்த்தவன் கையிலும்
ஏடுகொடுத்த சித்தர்!
சாணம் சுமந்த சிறுவனுக்கும்
ஞானம் போதித்த புத்தர்!

தமிழகத்து பட்டதாரிகளுக்கெல்லாம்
சுயவேலை திட்டம் கொடுத்து
வரலாறு படைத்தவர்!

அறியாமையை தன்
அறிவாலே உடைத்தவர்!

மாட மாளிகைகள் கட்டாமல்
பாட சாலைகள் கட்டிய‌
முதல்வர்!
ஒவ்வொரு தமிழ் வீட்டிற்கும்
தத்துப் புதல்வர்!

மாக்களாக இருந்தவர்களை
மக்களாக மாற்றிய மனிதர்!
நகரமாக இருந்த சமூகத்தை
சிகரமாக மாற்றிய புனிதர்!

படிக்காத மேதையே!
உன்னை படிக்காத மேதை
எவரெம்று சொல்!
உன் பெயர் தான்
மனங்கள் என்றும்
உச்சரிக்கும் சொல்...!

கவிஞர்.துளிர்
மதுரை

1 comment:

  1. நான் கவிஞன் இல்லை
    ஆனால் நல்ல ரசிஞன்
    இது நான் எழுதியது
    எப்படி பிரதிபலித்தீர்கள்
    எனது எண்ணத்தை
    அப்படியே அப்பட்டமாக

    நன்றி : வெங்கட்ராமன்

    ReplyDelete