Saturday, January 23, 2010

ஓ... மனிதா

அலை அலையாய் திரியும்
அழகு வெண்மேகங்கள்
களையிழந்து போன புவியை
நினைத்து விடும் கண்ணீரே...
மழை!

அம்மழை நீரிவும்
மாசு படிந்திருக்கிறதாம்...
மண்ணிலே கால் ஊன்ற‌
மரமோடு இணைந்த செடிகளும்
மயங்குகிறது...
மனிதா நீ யோசி...

மண்பாண்டம் உருமாறி
மயக்கும் வெண்கலமாய்... வெள்ளியாய்...
கண்ணாடி குவளையெல்லாம்
கண்கவர் பிளாஸ்டிக்காய்
மஞ்சள் துணிப்பை
மரபு போய்...
மக்காத தூக்குப் பையாய்...

அறிவியல் முன்னேற்றம்
ஆயிரம் இருந்தாலும்
இடித்துக் கூறு
இனிவரும் சந்ததிக்கு..
சுற்றுச்சூழல் பேணாவிட்டால்
சுனாமியும் சூறாவளியும்
சூன்யமாக்கிவிடும் உலகத்தை...

கவிஞர் மு.அர்ச்சுணன்
நாமக்கல்

No comments:

Post a Comment